அன்று பிறந்தாய் ! இன்று எனக்காக ! !.....

அன்னைக்கு அன்பான விளக்கங்கள்

நமது
முன்னோர்
முன்னே யோசித்து
பின்னே யாசித்து
பிறப்பித்தான்
முதல் எழுத்தாய்

அ என்று

அவன் அறிந்ததை
பிறர் அறியும் வண்ணம்
பிறர் தெரியும் வண்ணம்

கடகடவென
யோசித்து
கடேசிவரை யாசித்து
கச்சிதமாய் வரிசைபடுத்தி
கடைசியாய் படைத்தான்

ன் என்று

அ என்ற உச்சரிப்பையும்

ன் என்ற உச்சரிப்பையும்

துனையாய் இணைத்து
பெற்றவளுக்கு

அன்னை என்று சொல்லி
அற்புதம் படைத்தான் !

அந்த சொல்லை
தான் தந்ததால்
தனக்கு பிறக்கும்
குழந்தை தன்னை கூப்பிட
தனக்கு

தந்தை என பெயரிட்டான்

தாய்மையடைந்து தன்
குழந்தையை பெற்றதால்

தாய் என்று சொல்லி
தன் குழந்தை அழைக்க
தாய் என்று சொல்லிகொடுத்தான்

தன்னை அறிய
தான் உருவாக்கிய வார்த்தைக்கு
சித்திரமாய்
உருவம் கொடுத்து
அதை
சிற்ப்பத்தில் செதுக்கி
சிலையாக படைத்து
பின் பிறக்கும்
தன் சந்ததிக்கு

அழியா சொத்தாய்
அமுதமாய்
அறிவின் சிறப்பாய்
சிறந்த கண்டுப்பிடிப்பாய்
அன்பு கொடையாய்
அள்ளி தந்தான்
நம் மூத்தக்குடிமகன்கள்

மூத்தக்குடிமகன்கள்
கண்ட
கண்டுபிடித்த

எழுத்தை

தினம் தினம்
எழுதுவோம்

சரித்திரம் படைப்போம் !

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (15-Aug-13, 5:00 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 61

மேலே