இன்றைய வேண்டுதல்
இனியும் எழுத கூடாது என எவ்வளவோ முயற்சித்து மனதை கட்டி போட தெரிந்தவளுக்கு, கைகளை கட்டி போட தெரியவில்லை!
இடையில் துவங்கியதை இடையில் முடித்து விட முயற்சித்தாலும் என் பிறப்புரிமையாக என்னிடமே ஒட்டி கொண்டது.. மறக்க முடியாத அளவிற்கு!
எதை வடிகாலக்க நினைத்தேனோ அதுவே வாரி குழியில் இறக்க நினைக்கும் போது இரக்கங்களுக்கு கட்டுப்பட்டு இறங்கி விடுகிறேன்!
இனியும் மீள முடியாது என்பதை இந்த நாள் உணர செய்து விட்டது. அதனாலேயே மூடிய பேனாவை திறந்து என் கிறுக்கலை துவங்கி விட்டேன்.
மீண்டும் திறந்த பேனாவை மூடுமளவு இனி எந்த சூழ்நிலையும் என்னை சந்திக்க கூடாது என்பதே என் இன்றைய வேண்டுதலாய் இருக்கும்.