ஹைக்கூ கவிதைகள்.....
நீண்டநாள் ஆசை...ஹைக்கூ எழுத வேண்டும் என்று...
ஒரு வெள்ளோட்ட முயற்சி...விமர்சியுங்கள் நட்புகளே!
எரியும் நெருப்பில்
இறந்தது
தீக்குச்சி.
விதவை அல்ல.....
வெள்ளைச் சேலையில்
வண்ணத்துப் பூச்சி.
முள்ளில் படுக்கை
முகத்தில் சிரிப்பு
ரோஜா
அரசியல் வாதியிடம்
தோற்றுப் போனது
குரங்கு
விழுந்தும்
சிரிக்கிறது
அருவி...................