ஆடும் நாற்காலி
ஆடும் நாற்காலியில்
ஆடிக் கொண்டே
கடந்த நிகழ்வுகளை
மானசிகமாக பார்க்க
முற்பட்டேன்.
ஒன்றன் பின் ஒன்றாக
காட்சிகள் வந்து போயின.
எவ்வளவு நிகழ்ச்சிகள்
என்று பிரமிப்புடன்
நோக்கையில்
ஒரு சிறு காட்சி
என்னை மேலே
செல்லாமல் நிறுத்தியது
பள்ளி செல்லும் சிறுமி நான்
அவசரமாக உணவை
வாயில் அள்ளிப்
போட்டுக் கொண்டு
நேரம் ஆகி விட்டமையால்
வாசலில் நின்ற மகிழ் ஊர்தியில்
குதித்து ஏறி ஓட்டுனரை
விரைவாகச் செல்ல பணித்தேன்.
நான் வாசலை கடக்கும் பொது
எங்கள் சமையல் காரர்
கையில் பாலை ஏந்திகொண்டு
ஓடோடோடி வந்தார்.
ஓட்டுனரை நிறுத்தச் சொல்லி
பாலைக் குடி கண்ணா
என்று மன்றாடினார்.
இன்று நினைக்கும் போது
கண்கள் குளமாகின்றன .
ஓட்டுனரும் சமையல் கர்ரரும்
இன்று இல்லை .
இன்று எனக்கு அம்மாதிரி
ஆட்கள் இல்லையே
அன்பும் பாசமும் இல்லையே
என்று அவர்களை நினைத்து
கரைகிறேன் கண்ணிர் சிந்துகிறேன்
வயது ஏறும் போது
முடி நரைக்க தொடங்குகிற போது
கால் வலி தோன்றும் போது
யாராவது உதவ மாட்டார்களா
என்ற எண்ணம் நெஞ்சை அடைக்கிறது
சற்று நேரம் சிலை போல் அமர்ந்திருந்தேன்
என்னை யறியாமலே ஆடும்
நாற்காலி ஆடுவதை நிறுத்தி இருந்தது.
.