உனக்கு நீயே போடும் வேலி - ஒழுக்கம் ஒன்றுக்காக மட்டும் இருக்கட்டும்

முட்டி மோதியே உடைத்தாய் - நீ
தத்தி தத்தியே நடந்தாய்.....! அந்த
முயற்சியை ஏனடா தொலைத்தாய் - நீ
மூலையில் முடங்கி ஏன் கிடந்தாய்...!

அசைந்திடு சக்தி உனக்குண்டு
அடடா அழுவதை நிறுத்து.....!

பந்தாடு பூமியை சிரித்து - உனக்கு நீயே
போட்ட வேலியை உடைத்து...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Sep-13, 1:07 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 81

மேலே