உன்னால் சுழலும் உலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
இறகுகள் சிருசுதான்
இருந்துட்டுப் போகட்டும்
பாயாய் வானுமே....
ஏரியில் கிடக்கே...
மிதக்கிறேன் நானுமே
பறக்கிற மாதிரி.....
உனக்கும் கீழே
வானத்தை வைத்து வா
தன்னம்பிக்கை வைத்தே
தலைவனாய் மாறி வா.....!
குறையை நிறையாக்கு
குவலயம் உனக்கு.....!
நிறைகளை நிஜமாக்கு
நிதமும் உனக்கு.....!