நிஜத்தின் நினைவுகள்...!
எவருமே என்னிடமில்லாத நேரத்தில்
மௌனம் கூறியது நம் அன்பை...!
நாம் பேசாவிட்டாலும்,
மௌனம் நம்மை பற்றி,
பேசிக்கொண்டேதானிருக்கும்,
நினைவுகளாக....!
நீ வேண்டாம் என்று
விரட்டிவிட்டாய்
நம் காதலை...!
பாவம் அதற்கென்ன தெரியும்???
அன்பை தவிர
தாயை பிரிந்த பிள்ளையை போல
நம்மை தேடி தேடி அழுதது...!
நான் நம் காதலை அரவனைத்துக்கொண்டேன் ..!
நேற்று நிஜமாய்...!
நம்மிடம் இருந்த நம் காதல்.!!!
இன்று நினைவாய்...!
என்னிடம் இருக்கிறது பத்திரமாய்...!!!
என்றும் நிழலாய்...!
என்னை பின்தொடரும் என்பதில்
சந்தேகமே இல்லையடி என் அன்பு தோழி...!
நலம் உன்னை
நாடி வரட்டும்...!