@@@அருவருப்பு @@@

வழிந்துஓடிய சாக்கடையும்
===காரி உமிழ்ந்த எச்சும்
கசக்கி எறிந்த குப்பையும்
===மனித கழிவாம்
பன்றி விரும்பும் மலமும்
===படிந்துப்போன தூசியும்
அழுகிப்போன காய்கறியும்
===அழுக்கு நிரைந்த தொட்டியும்
ஈ மொய்த்த பண்டமும்
===சீழ் வழிந்த புண்ணும்
மிச்சமாக கொட்டப்பட்ட உணவும்
அருவருப்பாய் தோன்றவில்லை
தோன்றுகிறது அருவருப்பாய்
மனிதம் தொலைத்து மனிதனாக
நடமாடும் மக்களை நித்தம் பார்க்கையில்!!!

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (8-Sep-13, 11:16 am)
பார்வை : 277

மேலே