சுகம் தந்த காலங்கள் ...
சுகம்தந்த நேரங்கள் நிழலாக நெஞ்சினில்
அகமகிழ்ந்த நொடிகள் அன்றும் இன்றும் !
அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த
அளவிலா ஆட்டங்கள் குறுகிய குறும்புகள் !
எதிர்காலம் எண்ணி ஏங்கித்தான் இருந்தோமா
என்றாவது ஒருநாள் வருந்தித்தான் கழித்தோமா !
இளமைக் காலத்தில் இரவுபகல் பார்த்தோமோ
இனிதே கடந்திட்டோம் இனிமை காலங்களை !
திரும்பிப் பார்த்தால் நடந்துவந்த பாதையை
தித்திக்கும் நினைவுகள் திரும்ப வந்திடும் !
பயணித்தோம் பருவக்கடலில் பாய்மரத்தில்
பருகிட்டோம் சுவைத்திட்டோம் காலத்தை !
சுகம் தந்திட்ட காலங்கள் இனி திரும்பாது
சுழன்றிடும் பூமியில் சூழ்நிலை அரும்பாது !
இனிவரும் காலமும் இனபமுடன் கழிப்போம்
இதயங்கள் நாமும் இணைந்தே வாழ்வோம் !
பழனி குமார்