இதயம் உணரும் அவஸ்தையை.......
கற்றுக் கொண்டேன்
காதல் மூலம்
உறவுகளை........
தெரிந்து கொண்டேன்
காதல் மூலம்
நண்பர்களை..........
உணர்ந்து கொண்டேன்
காதல் மூலம்
காதலை........
அறிந்து கொண்டேன்
காதலினால்
பணத்தின் அருமையை....
பணம் படைத்தவர் மத்தியில்
காதல் படும் பாட்டை.....
இந்த கையளவு இதயம்
உணரும் அவஸ்தையை...
ஆதலால் காதலிக்க வேண்டும்
அனுபவத்தில் உலகப்
பாடம் கற்றுக் கொள்ள........