உணர்வு

அன்னையின் கரு போன்ற தவழும் குழந்தையாய்
ஆசை என்னும் உணர்வாய்
இன்ப துன்பங்களை அனுபவித்து
ஈகை மனப்பான்மையை ஊக்குவித்து
உலகின் முதலான காதலை
ஊதாரியாய் திகழ்ந்தாலும் அவனையும் உணரவைத்து
எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்து
ஏக்கங்களை எனக்குள் உணர வைத்து
ஐம்புலன்கள் வெளிகொனரவித்து
ஒலி-ஒளியாய் மனிதருக்குள் கொண்டு வந்து
ஓடம் போல வாழ்வின் திகழ்வித்து
ஔஷதம் என்னும் மருந்தாய் இறக்கவித்து
உண்மையாய் இல்லாமல் இருக்கும்
மனிதருக்குள் உணர வைத்து
உலகில் உணர்வு இல்லையனில்
உயிர் வாழ்வது அவசியம் இல்லை ...