பிரிய மனமில்லை..

விடை பெரும் நேரம் !!!

பிரிய மனமில்லை..
இணைய நேரமில்லை...

விடை இல்லா மௌனம் !!!

நாளும் சுவரும்
நகைத்து கொள்கிறது..
ஓரம் நீயும் நானும் சாய்ந்து கண்டு ...

உன்னை கடந்து கால்கள் செல்ல ..
மெல்ல நிறுத்தியது என் கை
பற்றி இழுத்த உன் கரங்கள்...

மெல்லிடை மெல்ல கைக்குள்ளே அடங்கியது..
உன் கொள்ளேனே பார்வை என்னை தீண்டியது ...
நாணம் கொண்டு தரையில் விழுந்தது என் பார்வை..

மெல்ல மூச்சு காற்று வீச
கண்கள் ரெண்டும் மோதிக்கொண்டது..
மௌனம் மட்டுமே பதிலாய் பேசியது..
வார்த்தை கூட சிதறி ஒளிந்து கொண்டது..

எழுதியவர் : ஜுபைடா (25-Sep-13, 2:13 pm)
Tanglish : piriya manamillai
பார்வை : 283

மேலே