மாலையும் மயங்கியது மேற்கு வானில்

மயங்கிக் கிடந்தது
வண்டு
மல்லிகை மலரினில்

மலர் மல்லிகை
மயங்கிக் கிடந்தது
மங்கையின் கூந்தலில்

மயங்கிச் சாய்திருந்தாள்
மங்கை
மன்னவன் தோளினில்

மாலையும் மயங்கியது
மேற்கு வானில்
மன்மத ராகம் பாடியது
மன்னவன் நெஞ்சினில்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (28-Sep-13, 7:17 pm)
பார்வை : 112

மேலே