எல்லோரும் ஏழைகள் ...

ஏழ்மையின் இலக்கணம்
இல்லாமைஎனில் - இங்கு
எல்லோருமே ஏழைகள்தாம்!

மணவாழ்வை எண்ணி
வற்றிய கண்களில்
நீரின்றிவாடும் கன்னிபெண்கள் -
ஏழைகள்!

குறிப்பிட்ட வேலையை
குறிக்கோளாய்கொண்டு
வேலையின்றிவாடும் வாலிபர்கள் -
ஏழைகள்!

பதவி இல்லாது பரிதவித்து
அலைபாயும் அரசியல் -
ஏழைகள்!

ஆக,
இங்கு எல்லோருமே ஏழைகள்தான் -
ஏழ்மையின் இலக்கணம் இல்லமைஎனில்...!

எழுதியவர் : அருள் ராம் (29-Sep-13, 1:56 pm)
Tanglish : ellorum elaikal
பார்வை : 75

மேலே