கடவுளின் காட்சி

கல்லில் கடவுளை கண்டவன்
கருணையில் கடவுகளை காண மறுக்கிறான்

சொல்லில் கடவுளை கண்டவன்
செயலில் கடவுளை காண மறுக்கிறான்

தூணிலும் துரும்பிலும் உள்ளான் என்று நம்புவோர்
தோளிலும் மார்பிலும் சுமந்த அன்னையிடம் உள்ளதை மறுக்கிறான்
ஆபத்தில் கண்முடி வேண்டுபவன்
பகுத்தறிவு கண் திறந்து யோசிக்க மறுக்கிறான்

பிரார்த்தனை,வேண்டுதல் செய்ய தவறாதவன்
சேவை,தானம் செய்ய மறுக்கிறான்

கோடி கணக்கில் ஆலயம் அமைக்க செலவு செய்பவன்
கோடி மாணவர்களுக்கு பள்ளி கட்ட மறுக்கிறான்

மறுத்த அனைத்தையும் பாவமாக சேர்த்து
அனைத்து பாவத்தையும் கடவுளின் உண்டியலிலே சேர்க்கிறான்

வெள்ளை மனம் இன்றி கருப்பு பணமாக‌""

எழுதியவர் : அருண் (30-Sep-13, 2:35 pm)
சேர்த்தது : அன்புடன் அருண்
Tanglish : kadavulin kaatchi
பார்வை : 61

புதிய படைப்புகள்

மேலே