கடைசி காற்றில் கரையும் கடைசி உயிர்!!!
தொழிற்சாலை கழிவுகொண்டு
ஓசோனை ஓட்டையிட்டும்
மழைத்துளி கீழ்விழுந்தபாடில்லை!
எதிரி, உயிர்வாயு உறிஞ்சும்
வேதிஆயுதம் புரியாமலும்-இங்கு
காற்றில் உயிர்வாயுமில்லை
அதே கழிவுகளால்!
உலகப்போர் வினையூக்கியாம்
'நீராதாரம்'மும் இல்லை
அந்நீரோடையிருந்த ஆதாரமுமில்லை
மணல்கொள்ளையர்களால்!
மிகச்சிறிய அணுவையும்
கடைந்து கிடைத்த மின்சாரமோ
போதவில்லை மருத்துவமனைகளுக்கே!
அதிலெஞ்சிய உயிர்களுக்கோ
இறப்பு உண்டு இலவசமாய்
விஞ்ஞானஅரசியல் உற்பத்தி செய்த
அணுக்கழிவுகளால்!
எனில் முடங்கிப்போனது
மனிதனின் இயக்கம்!
ஏன் தொழிற்சாலையின் இயக்கமும்!
வேலையிழந்த தொழிலாளர்கள்
நடத்துகின்றனர்
'சாகும்வரை பட்டினிப்போராட்டத்தை!'
உணவின்மையால்!
அப்படியிருக்க,
'உனக்கெப்படி கிட்டும் நாவற்பழம்' என,
இரைதேடி வந்து மரிக்கப்போகும்
கடைசி சிட்டுக்குருவியிடம்
வாழ்விழந்து மரித்துக்கொண்டிருக்கும்
நாவமர-பச்சயத்தொழிலாளர்களில் ஓன்று
வினவுகிறது!!