சில நொடி காலம்

மாயையான உலகில் மனிதனின் வாழ்க்கை
புல்லின் நுனியில் பணிபோல் - அதில்
போராட்டங்கள் தான் எத்தனை எததனை

பெண்ணடிமையும் கொத்தடிமையும்
தென்றலாய் புடை சூழ - இங்கு
வன்முறையும் வரதட்சணையும் வாழ்வை அழித்தனவோ?

கசடற கற்றும் ஞானங்கள் பெற்றும்
காலங்கள் மாறியும் நாம் மாறவில்லை
மனிதத்துவம் மறைந்து மனுக்குலம் மடிவதால்

பாவம் என்ன செய்ததோ மழலை
கற்க வந்ததால் கருத்தரிக்க - சிலர்
காரணம் கேட்டதால் உயிர் துறந்தால்
தன் மானம் கருதி.

வெள்ளை புடவையில் அவள் உலா வந்தும்
விட்டு வைக்கவில்லை தெரு நாய்கள் - அவர்களின் காம பசி தீரும் வரை.

வறுமை வட்ட தான் செய்கிறது
வசதிகள் இருந்தும் நாம் இன்னும்
மன தாழ்மையாய் வாழ்வதால்.

மனிதா உன் மூச்சி இருக்கும் வரை - பலரை
முடக்கி விடாதே முன்னேற்றிவிடு
சில நொடி காலம் நீ வாழ்ந்தாலும்
பல்லாண்டு காலம் வரலாறு உன் புகழ் பாட .

எழுதியவர் : மா.செபஸ்டின் (2-Oct-13, 12:25 pm)
Tanglish : sila nodi kaalam
பார்வை : 109

மேலே