எங்கே போகிறாய் ? உயிரே !
இருள் மங்கிய இரவிலே
உயிரே ; எங்கே போகிறாய் ?
உனை நாடி வருகிறேன் ;
உயிரே ! ஏற்றுக் கொள்வாயா ?
உன் கண்களில் ஏன் இந்தக்
கண்ணீர் ? என் மடியில்
உறங்க வா ! வா !என் உயிரே !
உனை நாடி வருகிறேன் 1
நீ ஏற்றுக் கொள்வாயா !
ஏன் இந்த சோகம் உனக்கு ?
நான் என்றும் சுகம் தான் உனக்கு ;
உன்னாலே வாழும் ஜீவனடி -என்
உயிருள்ளவரை இது உண்மையடி !
அழுவதால் சோகம் குறையுமா ?
மனவலியின் மயக்கம் தீருமா ?
நிஜம் தேடும் உலகிலே - நீ
நிழல் தேடி எங்கே போகிறாய் ?
சுமை தாங்கி நிற்கின்றேன்
சுகம் காண வருவாயா ?-என்
உயிரே ! எனை ஏற்றுக் கொள்வாயா ?
எதைஎதையோ தேடி எங்கோ வெறிக்கிறாய்
அலையும் உன் உள்ளம் கடலலையாய் மாறிடுமா
கரைதனைத் தான் சேர்ந்திடுமா
என் கதை தான் மாறிடுமா ? இந்த இருள் மங்கிய
இரவிலே ; உயிரே எங்கே போகிறாய் !