முதல் பிரசவம்
சாதிக்கப் பிறந்தவள் சோதிக்கப்படுகிறாள்
சாதனை படைத்திட பல சோதனை தாங்குகிறாள்
பத்து மாதங்களும் பல வேதனை படுகிறாள்
அவளுக்கு.....
மாதந் தவறாமல் மருத்துவ பரிசோதனை
அன்றாடம் கிடைக்கும் ஆரோக்கிய உணவுகள்
உடம்புக்கு வந்துவிட்டால் உடனடி மருந்துகள்
அடுக்கடுக்காய் தொலைந்தன அவளது மகிழ்வுகள்
சுமக்க இயலாது தவிக்கிறாள் தன்னுள்,
தூங்க மறக்குது அவளது இமைகள்,
யாருக்கும் புரியாது இவள் படும் கஷ்டங்கள்,
அழுதழுது பெற்றாலும் அவள்தானே பெற
வேண்டும்?
சுகப்பிரசவமோ, அறுவை பிரசவமோ
யாருக்கும் இங்கே கவலையில்லை
அனால் ......
பெறப்போவது நல்லதாய் மட்டுமே
இருந்திட வேண்டுமென எல்லோரும் வேண்டினர்
அவள் பெறப்போவது ஆணுமல்ல, பெண்ணுமல்ல
பிறகு?..... .
பெரும்மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
பாட மதிப்பெண்
அவள் படிப்பதோ பத்தாம் வகுப்பு!!!