சாலத் தகும் வேலை பார்
![](https://eluthu.com/images/loading.gif)
கோவில் மணியடித்து காலை விடியும்
பாயில் படுத்து இன்னும் நீ புரளு
எழுவது என்பதே உனக்குத் தான் வாராதே
தம்பியோ தங்கச்சியோ
தலைமாட்டில் தேத்தண்ணீ தருவார்
கடவாய் வழிய கண்ணை மூடியிழு
குண்டியிலேறி சூரியன் சுடும்
அதன் சூட்டில் கூட முழிக்காதே
தெய்வங்கள் சாய்ந்த தேசவீதியில்
சாத்தான்கள் உலவும் நேரமிது
கொழும்பில் கூட்டுக் குடித்தனம் நடத்தியவர்
இனித் தனிக்குடித்தனம் கேளோமென்று
பேட்டி கொடுத்தது அருமை
வேட்டி கட்டி விடுதலைத் திரை கிழிக்க
தமிழ்ப் பார்ட்டி ஒன்று வேகமாகிவிட்டது
மிதவாத தோணி தேச மைந்தர்கள் குருதியில்
பயணித்தும்
தனி நாடு மறுக்கிறது
விக்கினங்கள் தீர்ப்பதாய் வீட்டில் நின்ற
விக்கினேஸ்வரனை
விரல்களால் விமானமேற்றி
அலரிமாளிகைக்கு அனுப்பி வைத்த அலுப்பு
இன்னும் அரைமணி நேரம் நித்திரை நீட்டு
விடுதலை வந்ததென்று தூங்கிக் கனவிலழிதல்
இருத்தலை இல்லாதொழிக்கும் இழிவு வாழ்வு
வீடு வென்றதென்று வீதியில் வெடி கொளுத்தி
ராஜ மரியாதை பெற்று விட்ட
மாயையை நம்பியெங்கள் விடுதலையை மானக்கெடுத்தாதே
அசையும் காலம் ஒவ்வொன்றிலும்
காயம் பெருக்குகிறது வாழ்வு
விடுதலைக்கான விலை கொடுப்பு
வித்தியாசமானது.
ஓட்டைப் பானையில் தண்ணீர் நிரப்புதலும்
மொட்டைத் தலைக்கு சீப்பு விற்றலும்
வீட்டில் நின்றவர்க்கு கை தேர்ந்த ஞானம்
காணியும் காவல்துறையுமற்ற அதிகாரத்தில்
எந்த ஆணியும் புடுங்கமுடியாது
வடக்கிலினி சுதந்திரப் பண்ணுக்கு பதிலாய்
தேவாரப் பண் தெருவெங்கும் கேட்கும்
சம்பந்தர்கள் கொழும்பின் முலைகளில்
ஞானப் பால்களை பருகியபடி
ஒன்றுபட்ட தேசத்தில் சுயாதிபத்தியத்தை தூர வைப்பர்
கோவணங்களை சிங்கக்கொடியில் தூக்கி மாட்டும் வரை
காதில் சங்கூதினாலும் எழும்பாதே
நாடு என்பதும்
வீடு என்பதும்
நமக்கானதாய் இருக்கவேண்டும்
அதற்கு தானே தேச வரத்திற்காய்
மூன்று தசாப்தங்கள் தேகம் வருத்தினோம்
யோசித்துப் பார்
விடுதலையென்பது விரல்களால் சாத்தியமில்லையிங்கே
துப்பாக்கி பரல்களால் தகும்
மண்ணை பத்திரப்படுத்தி
நித்திரை கொள்வது தானே தமிழர்க்கழகு
நீ தமிழனா என்ன ?