மழையைக் கண்டு ரசிப்பது எப்போ!

என் அறையில் அமர்ந்து
நான் பணியில் மூழ்குகிறேன்!

திடீரென்று பலத்த காற்று
முகத்தில் அறைகிறது!

சன்னல் கதவுகள் படபடவென
அடித்துக் கொள்கின்றன!

சன்னலுக்கு வந்து வெளியே
எட்டிப் பார்க்கிறேன்!

குளிர்ந்த காற்று உடன் வந்து
மனதுக்கு இதமளிக்கிறது!

மழைத்துளிகள் சடசட என
சப்தத்துடன் தெரிக்கின்றன!

சன்னல் கண்ணாடிகளில் விழுந்து
வரும் பெருமழையை அறிவிக்கின்றன!

இசைக்கருவிகளின் நரம்புகளாக
சீரான மழை இன்னிசை பொழிகிறது!

மழையைப் பார்த்துக் கொண்டே
இருக்கவும் ஆசைதான்!

இன்னிசையை கேட்கவும்
ஆவலாகத்தான் இருக்கிறது!

வேலையும் தலைக்கு மேல்
காத்துக் கொண்டு இருக்கிறதே!

என்ன செய்வேன், மழையை
எப்போ ரசிப்பேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Oct-13, 10:26 am)
பார்வை : 299

மேலே