முற்றிய நாகரீகம்

முற்றிய நாகரீகம்
பற்றி எரியிதோ!
தொற்றிய புதுமைகள்
தோலினைக் காட்டுதோ!
கொத்தும் வாலிபம்
சுற்றித்திரியுதோ!
கெட்டும் மானமும்
காற்றில் பறக்குதோ!
விற்றும் கற்பும்
விலையும் ஆகுதோ!
பற்றும் பண்பும்
பாடை ஏறுதோ!
அற்றும் அடக்கம்
ஆசை மீறுதோ!
கத்தும் பெண்மைகள்
காற்றில் கேட்குதோ!
பற்றும் அவலங்கள்
பரவிப் பதறுதோ!
குற்றம் கொலைகளும்
கும்மி கொட்டுதோ!
பட்டும் பாவைகளும்
பலிகளாகுதோ!
மொட்டும் பிஞ்சுகளும்
மோகமழிக்குதோ!
எட்டும் கொடுமைகள்
இறைவன் அறிவானோ!
நட்டும் அரசுகளும்
நசுக்க முயலுமோ!
கொ.பெ.பி.அய்யா.