அற்புதமான தருவாயில்

உயிருக்கு உன்னதம் தருவாய்
இத்தருவாயில்...
இப்பொழுதன்றி அப்பொழுதன்றி
முப்பொழுதும் ஒன்றாகலாம்...
புதிய காதலை புதுவரவினர்களுக்கு
முன்மொழியலாம்...
நமக்கான இந்நேரத்தை நீடிக்க
கடிகாரத்திற்கு கட்டளையிடலாம்...
காற்றில் மேடை அமைத்து
நம் காதலை அரங்கேற்றலாம்...
வெண்ணிற முகில்கள்
நம்மை வாழ்த்தட்டும்...

எழுதியவர் : கண்ணன் (19-Oct-13, 2:21 pm)
பார்வை : 146

புதிய படைப்புகள்

மேலே