என் உயிர் எனக்கு சொந்தமில்லை 555

உயிரே...

என் உயிரிலும் உடலிலும்
உணர்விலும் கலந்த...

என் உயிர் நீதானென
வாழும் என்னை...

யாரோ ஒருவருக்காக
தூக்கி எறிந்தாயடி...

நாளை உன்
உறவுகளுக்காக...

என்னை உதறி
தள்ளி விடமாட்டாயா...

பெண்ணே உன்னையே
நினைபவர்களை...

நீ நேசிக்கவேண்டாம்...

அவர்களை நீ வெறுக்காமல்
இருக்க முயற்சி செய்...

நீயோ என்னை வெறுத்து
ஒதுகிவிட்டாயடி...

நானே செல்கிறேன்
உன்னைவிட்டு விலகி...

பிறரின் உணர்வுகளை
நீ மதிக்க வேண்டாம்...

உணர முயற்சி செய்
இனியாவது...

உன்
இதழ்களில் இருந்து...

இனியும் அப்படி வார்த்தை
முட்கள் வேண்டாம்...

விலகி
செல்கிறேன் நானே...

மீண்டும் உன்னிடத்தில்
நான் கேட்டால்...

என் உயிர் எனக்கு
சொந்தமில்லை உயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Oct-13, 2:26 pm)
பார்வை : 546

மேலே