கனவுக்குள்ளும் கசையடி

ஒரு சில நிமிடங்கள்...
உறங்கி விட ஆசை எனக்கு..
உன் நினைவின் அவஸ்த்தை என்
கனவுக்குள் குடியேறாமல்...

கண்ணயரும் போது
கடைக்கண்ணில் ஒளிந்துகொள்வாய்
தடை இன்றி நடை பயின்று
நடு இரவையும் வென்றிடுவாய்...

ஆழ மர விழுதுகளாய்
ஆழ்மனதில் உன் நினைவுகள்..
அடியெடுத்து வைத்ததாலா அத்துமீறி
ஆள்கிறாய் என் அர்த்த ராத்திரியை..

முகத்தோடு மூடிக்கொள்கிறேன்...உன்
முகவரி மறப்பதற்காய்...விழிமூட
முடியவில்லை உன் முனகல் சத்தம்
முட்டிக்கொண்டு முளைப்பதால்...

உறங்காமல் உறங்கினாலும்...
உள்ளூர உன் நினைவு உறக்கத்தின்
உச்சி வரை உரிமையுடன் உலாவரும்
ஊரடங்கும் சாமத்தின் காவல்காரனாய்

இன்னுமொரு பிறவி எடுத்தாலும்
இனி எனக்கு உன் நினைவின் தூரல்களே
இரவை சொந்தமாக்கும் கனவுகளாய்...
இப்படிக்கு உன்னால் மற(று)க்கப்பட்ட காதலி...

மாலினி







..
..

எழுதியவர் : malini (23-Oct-13, 9:09 pm)
பார்வை : 112

மேலே