காதல்
அன்பே - உன்
சில்லரை சிரிப்பால்
சிந்தனை சிதைந்தது
நிலவு முகத்தால்
தூக்கம் கெட்டது.
நினைவு இடியால்
விழி ஜன்னலில் மழை
இமைக்கம்பிகளின் ஓரமாய்
கண்ணீர்ச்சாரல்
நனைந்த. ஈரச்சுவடால்
துரு பிடிக்கின்றது
தினம் கைகொண்டு துடைத்தும்
மனம் ஏனோ பாரமாய் கணக்கின்றது.
புனிதன்.இ .....