இனிமைப் பொங்கல்
இனிமை என்றும்
நம் இதயத்தில் வாழ்க!
நம் இதயங்கள் என்றும்
இனிமையில் கனிக!
இனிமைப் பொங்கல்
என்றுமே பொங்குக!
இயற்க்கை இன்புற்று
நம் செயற்கையைப் போக்குக!
இயற்க்கை நம் இயல்பினில்
இனிமையாய்ப் பொங்குக!
இனிமையே நம் இயற்கையாய்
என்றென்றும் பொங்குக!
வாழிய தமிழ்! வாழிய தமிழர் திருநாள்!
பாலு குருசுவாமி