நானும் ஒரு பெண் தானே

ஒரு அழகான காலை....
மெதுவாய் விடிந்த பொழுது
மெல்லிசையாய் குயிலின் குரல்.

பட படத்த பனை ஓலைகள்..
சல சலத்த ஓடையின் ஓசை
தென்றல் முகம் தொட்டு

வெயில் விளக்கேற்றி
விடிந்தது எனக்காகவே இன்று..

அழகாய் ஆடை அணிந்து
அரை முடி கூந்தல் காற்றில் அலச
அன்ன நடை போட்டு

மையிட்ட கண்களில்
மையல் எண்ணம் கொண்டு
என்ன சிறகுகளை பறக்க விட்டு..

எந்தனின் வாசனையை தூது விடுகிறேன்
எனக்கு முன்பாக சென்று
என் மன்னவனை தொட்டு விடு என்று

கத்தி போல் கண்கள்
காந்த பார்வை
ராஜா நடையும்
எப்படையும் தோற்கும்
என்னவனின் முன் நின்றால் .

பேர் அழகியும் மயங்குவாள்
அவன் பேசினால்..

எப்படி என்றே தெரியாமலே
என்னுள் எப்படி நுழைந்தான்...
எப்படி நுழைத்தேன் அவனை
என் இரும்பு இதயத்தில்..

ஒவ்வொரு மாலையும்
அவன் நினைவுகள்
என்னை என்ன செய்கிறதென்று

சொல்லவே இல்லை என் மொழியில்
நான் எப்படி இப்படி ..

ஒரு முடிவுடன் பார்க்க போகிறேன்
எப்படியாவது இன்று
அவன் பெயரை கேட்டு விடுவது
என்ற வைராக்கியத்தில்

எது கிளம்பி விட்டேன்
என்னவனை பார்க்க போகிறேன்,
ஆமாம் பார்க்க போகிறேன் ....

என்ன செய்வது
நானும் ஒரு பெண் தானே

எழுதியவர் : ஆதவன் (17-Jan-11, 2:43 pm)
சேர்த்தது : ஆதவன்
பார்வை : 614

மேலே