தோழி என்றும் சொல்ல முடியல
காற்று நிறைந்த பூமியிலே
என்னால் சுவாசிக்க முடியலையே
காதல் நிறைய இருந்தாலும்
உன்னிடம் சேர்க்க வழியில்லையே
இது என்ன உறவு சொல்ல முடியல
உன்னை பார்த்தும் பேச முடியல
என்னை என்னால் நம்ப முடியல
உன்னை என்னால் மறக்கவும் முடியல
தோழி .......
தோழி என்றும் சொல்ல முடியல
காதலியான்னு ஒன்னும் புரியல
கண்ணை மூடுனா தூங்கவும் முடியல
உன்னை கனவில் கூட வெறுக்கவும் முடியல
பாவம் நான்.....
பாவமாக போனேன்னம்மா
பைத்தியமாக ஆனேன்னம்மா
தன்னந்தனியாய் சிரித்தேன்னம்மா
உன்னை கண்டு வியந்ததாலே இதனையும்
நடக்குதம்மா......