எந்தன் இதய காதல் செடி

அன்பென்னும் அழகன் நீயடா .
எந்தன் காதலின் அர்த்தம் நீயடா.
கோபம் கொண்ட என் மீசைக்கார.
என் உள்ளம் அதுவே உன்னிடம்.
அன்பினால் தூரத்தில் இருக்கிறாய் .

கனவில் என் அருகில் தோன்றுகிறாய்.
நீயும் என்னை கிட்ட நெருங்குகிறாய் .
உந்தன் கரம் கொண்டு அணைக்கிறாய்
அன்பை மெல்ல மெல்ல பொழிகிறாய் .
ஆசையாய் பேசி புன்னகை செய்கிறாய்.

தாய் போல அன்பாய் பாசம் காட்டுகிறாய்.
தந்தை போல பல அதிகாரமும் செய்கிறாய்.
குழந்தை போல கொஞ்சி கொஞ்சி பேசுகிறாய்.
நீதானே எந்தன் என் உயிர் கனவுக் காதலனோ.
நான் உறங்க அருகில் இருந்து அமைதி தருகிறாய்.

தூரத்தில் நான் இருக்க நீயோ துடி துடிக்கிறாய்
முதல் முதல் நாம் இருவரும் சந்தித்த நொடிகளில்.
அடுத்த நொடி உன் இதய வீட்டில் நான் இடம் பிடித்தேனே.
இதயம் இணைந்தோம் நம் கை சேர்ந்து விட வில்லையே .
நான் வளர்க்கும் எந்தன் இதய காதல் செடி என் காதலன் நீயே .

எழுதியவர் : (8-Nov-13, 7:15 pm)
பார்வை : 73

மேலே