எனக்குப் பிடித்த நல்ல கவிதை
ஒப்புக்குச் சொல்லவில்லை,
மனதில் பட்டதை,
உயர்வாய்ச் சொல்கிறேன்.
கவிதை சிறக்க,
எழுத்து எண்ணத்தில்
அசைபோடவேண்டும்.
பொருள் அறிந்து தெரிந்து
புரிதல் வேண்டும்.
பொய் உரைக்கவில்லை
எழுத்தில் எளிமை,
கருத்தில் புதுமை.
இதுவே எனக்குப் பிடித்த,
நல்ல கவிதை என்பேன்.