மதுரை தோழி
நீ ஆடி வீதியில் ஆடிவந்தாள்
மாட வீதியெங்கும்
மல்லிகை வாசமடி,
நீ மாசி வீதியில் மையல் கொண்டால்
சித்திரை வீதியெல்லாம்
சிலிர்க்குதடி,
நீ வெளி வீதி உலா வந்தால்
மதுரையெல்லாம்
வெள்ளி விழா கோலமடி,
உன்னை பார்த்தோர்
யாரும் சொல்வதில்
மதுரைக்கு அழகு
நான்கு மாட கோவிலென...
சொக்க வைக்கும் அழகுடையோன்
என் அப்பன் சொக்கநாதன்
அவனையும் சொக்கவைத்த
தேவதையே,
உன் அழகை காண
மதுரை வந்த அழகரும்
நீ எதிர் சேவை கொண்டதனால்
வைகையோடு திரும்பி விட்டான்,
உன் பாதம் தொடா பாவத்தினால்
அலைகடல் சேர சாபம் கொண்டது
வைகையடி ,
வளர்ந்து வந்த பௌர்ணமியும்
உன்னை காண முடியா போனதனால்
கரைந்து கரைந்து மறையுதடி ...
உன் மேல் பட்ட பனிகாற்றும்
அழகர் மலையில் பேசுதடி ,
உன்னை தொட்ட சேதி சொல்லுதடி ...
இரவும் பகலும் உன்னைக்கான
தூங்கா நகரமடி
நீ இல்லாது போனால்
இது நரகமடி
என் மதுரை தோழி...