காதல் கவிதை
காத்திருக்க ஆசை படுகிறேன்
என் கடைசி காலம் வரை
நித்திரைக்கிறேன் நீண்ட காலம்
உன்னுடன் வாழ
விரதம் இருக்கிறேன் உன்னை - என்
வீட்டுக்காரியாகப் பார்க்க
தவமாய் தவமிருக்கிறேன் - உனக்கு
தாலி ஒன்னு நான் கட்ட
ம் என்று நீ சொன்னா இமயம் வரை
இழுத்து செல்வேன் - என்
இதயம் தொட்ட இதயம் உன்னை
எனை விட்டு நீ பிரிஞ்சா நீரற்ற நிலம்போல
நீர்த்துப் போகுதடி நெஞ்சமெல்லாம்
கண்டுக்காம நீ போனா கருவ முள்ளுபோல
கவ்வுதடி என் கருஞ்சிவப்பு இதயமெல்லாம்
பித்து புடிச்ச போல பேசாம நிக்கிரண்டி
பேசாம நீ போனா
வெட்டருவா போல வெட்டுதடி
வேணாம்ன்னு நீ சொன்னா
வாட்டி எடுக்குதடி - உன்
வறட்டுப் பிடிவாதம்
ஊர் முழுக்கப் பெண்ணிருக்க -உன்
பின்னால் மட்டும் ஓடுதடி
ஓடுகாலி பய மனசு
கொஞ்சம் நேரம் பாத்தாலும்
கொல்லாம கொல்லுதடி - உன்
கொள்ளை அழகு
எனக்கு ஒன்னும் தோனலடி
ஓங்கூட நான் வாழ
ஆனாலும் ஏங்குதடி ஏம்மனசு
மகராசி ஒன்ன மணமுடிக்க............
--------------------அரி.அன்பு----------------