பொறாமை

பிரம்மனின் படைப்பு
இயற்கை !
பெண் !
இன்னும் பல....... !!
இவற்றை கண்டு
என்னுள் பொறாமை
எழவில்லை

ஆனால்

கவிஞனைக் கண்டு
அவன் கவித்திறனைக் கண்டு
அவனின் படைபாற்றலைக் கண்டு
என்னுள்
பொறாமை ஊற்று
பொங்குகிறது !!!

ஒரு கவிஞனால்
ஒரு எழுத்தாளனால்
மட்டுமே
எவ்வாறு
அவனைப்படைத்த
பிரம்மாவுடன்
போட்டியிட முடிகிறது !!!

பிரம்மாவையும்
மீறிய
ஒரு படைப்பை
படைத்தல்
உயிர்பித்தல்
சாத்தியம்
என என்னுள் பொறாமை பொங்குகிறது !!!

எழுதியவர் : வானதி (22-Nov-13, 12:54 pm)
Tanglish : poraamai
பார்வை : 1212

மேலே