தீபாவளி

தன் வாரிசு கேட்ட
துணிமணிகளை வாங்கித்தரத்துப்பில்லை...

அம்மாவுக்கு அரைபவுன் மோதிரம்
வாங்கித்தாராது கூலர் பேன் அறையில்

பணிபுரிந்து கும்மாளம் போட்டு
தெருக்கோடியில் உருண்டோடுபவர்களால்

கோடிக்கணக்கில் கொடிகள் குவிகிறது...


"அம்மா திறந்து ஊத்த
மகன் குடிக்க
அப்பா அடித்துத்திருத்தாதபோது
எப்படி முன்னேறும்
குடும்ப பொருளாதாரம்"

வெட்கக்கேடு!
வேறொன்றுமில்லை...

"வேட்டி ஒரு பக்கம்
அப்பன் ஒரு பக்கம்
இதையெல்லாம் திருத்தவியலாது
எழுதும் நானொரு பக்கம்"

வெட்கக்கேடு!

எழுதியவர் : (22-Nov-13, 4:34 pm)
Tanglish : theebavali
பார்வை : 115

மேலே