அது போதும் எனக்கு
இணையத்து அரட்டையில்
நேரத்தை வீணாக்கி
வீணான துன்பத்தை
விலைக்கு வாங்கி
அணுவணுவாய் சிதையும்
சீரழிவு வாழ்க்கை
வேண்டாம் எனக்கு.............!
செம்மண் வாய்க்கால் வழியே
ஓடிவரும் குளிர்நீரில்
கால்புதைய பாத்தி கட்டி
அழகாய் வளரும் பயிரில்
ஆனந்தமாய் வேர்வை சிந்தி
என் உழைப்பால் உயர்வேன்
அது போதும் எனக்கு ........!!!