காதல் என்னிலே இறந்துவிட்டுப்போகட்டும்
காதல் என்னிலே இறந்துவிட்டுப்போகட்டும்
காலம் உன்னை வருந்தியவாறே
உன்னை வாழ்த்தட்டும்
முகமிழந்த சுவாசம்
காற்றில் ஆசுவாசப்படுத்தப்படுகிறது
காதலுக்கு கல்யாணமாம்
கனவுகள் பந்தல் போடுகின்றன
என்னுள் இருந்த ஈரம் வற்றிடக்கூடும்
இதுவரை கண்னீர் சிந்தவில்லை
காற்றை கருக்கிக் கொண்டிருக்கிறேன்
உன் சூடான நினைவொழுகல்
என் ஈர நிலவை ஏங்கவிடுகின்றன
உன் நிலவுப்பொதிந்த
பூமுகம் புதையலிடுகின்றன.
ஈரனினைவுகளை புரட்டுகையில்
நானோ இரட்டிப்பாகிறேன்
ஆம் காதல் என்னில் கனக்கிறது.
சொன்னால் புரியாத காதல்
சொல்லாமல் தெரியவா போகிறது?
என்விழிகள் பேசா மொழிக்கூறு
உலகில் எந்த மொழி பேசக்கூடும்
வெற்றியை புரந்தள்ளிய இக்காதல்
பக்குவத்தினை எனக்கு பரிசளிக்கிறது
ஆனால்
நான் பக்குவப்பட்ட கால பாதிப்பு
இக்காதல்.
என்னிதயம் இறுக்கத்தினை தளர்விடுகின்றது
முதல் சுவாசம் போல்
உல்லாசம் பிரசவிக்கிறது
தோல்விப்போல் பயணம் இல்லை
தோல்வி என்னை ஆரம்பனிலைக்கு உந்துகிறது
இம்முறை இன்னும் நன்றாக.
உன்னோடு முடியுமென்றால்
காதல் இறந்திருக்கக்கூடும்
காதல் என்னை துரத்திக்கொண்டே தான் தொலையும்.