நேற்று பெய்த மழையில்

நேற்று பெய்த மழையில்
என்னை தொலைத்த ஞாபகங்கள்
சற்றே சலவை செய்யப்படுகின்றன.

நான் சிரித்து சிலாகித்த நிமிடங்கள்
என்னை நோக்கி சிரிப்பை சிந்துகிறது.

நான் மொழியாடல் செய்வேனா?
இல்லை மூளையில் விளக்கேற்றுவேனா?

விழிகளில் இதயம் இழப்பேனா?
இப்படி விரயம் ஆவேனா?

பூக்களிலுள்ள மகரந்தம் போல
உன்னை நிலவில் முகம் பதித்தேன்.

நீயோ திங்களுக்கே
மஞ்சள் பூச நினைக்கிறாய்.

விருட்சமாவற்கே விளையும் விதை
உன்னால் விடைக்கொள்கிறது.

பூக்களாய் சில்லிடும் புன்னகையில்
கொஞ்சம் உண்மையையும் கலந்திடு.

இங்கே எந்த முகமும்
புத்தகம் போலில்லை!

எந்த முகத்திலும் அகம் தெரியவில்லை.

என் காதலியின் முகத்தில் கூட
என் முகம் தெரியவில்லை.

நீர் நிரம்பும் குவளைப் போலே
கனவுகளை சுமந்தே வாழ்விக்கிறேன்.

வேர்கள் புதயுண்டால் தான்
விருட்சம் வெளிக்கொள்ளும்

என் காதல் விதையுண்டது
ஞானம் வெளிக்கண்டது.
ஒளியிழை கண்களில்
நான் உயிரிழந்தேன்.

பூலோக மாற்றமோ!
ரசாயண ஏற்றமோ!
என் மனம் லயித்து போயுள்ளது.

விழிகளில் அவளை தேக்கினேன்
வழிகளில் அவளை நோக்கினேன்.

காற்றெல்லாம் சுவாசம் படர்ந்திருந்தது
அவள் வாசம்.

எங்கு விழுந்தாலும் ஒட்டிக்கொள்ளாமல்
பயணிக்கும் நிழல்ப்போல
உன் நினைவுகள் என்னோடே
இடம் பெயர்கின்றன.

உன் பார்வைகளில் நான் வசித்திருப்பேனா?
என் ஏக்கம் தன்னை அறிவாளா?

கேள்விகள் கூட கேலி தான்!.

மறைப்பொருள் ஒன்றை
மனம் தேடுகிறது.

காதல் இருக்க இடமில்லாமல்
என்னை நோக்குகிறது.

நான் அதனை அனாதையாக்குவேனா?
இல்லை அனைத்துக்கொள்வேனா?

என் இதயம் வழிய
மொழிகள் எழுதுகையில்
தனிமை மறக்கிறேன்.

பழுத்த இரும்பு அரும்பில் பாய்வது போல்

உன் ஒருமித்த கண்கள்
என் உயிர்வரை பாய்கிறது.

aகனவுகளுக்கு நான் வழிய விட போவதில்லை
நினைவுத்தருவாயிலே நிலவுகிறேன்.

உன் அறையில் நிலவும் சுகந்தம்
பூக்களின் அழிவுக்கு உரமிடுகின்றன.

உன்னை பிரதியெடுக்கும் கண்ணாடி
எப்படி உடையாமலிருக்கும்?

உன்னை கண்களில் கண்ட
எனக்கே இதயமுடைகிறதே!

கண்ணாடியே கண்ணாய் கொண்டதற்கு
என்ன நேறுமோ?

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:30 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 146

மேலே