காதல் என்பது என்றும் மென்மை

செடி என்ற புத்தகத்தில்
முள் என்ற பேனா எழுதிய
முத்தம் பற்றிய கவிதையே
முழு ரோஜா என்ற மலர்.....!

குத்தும் என்று முள்ளைச் சொன்னால்
கோபம் வரும் எனக்கு - அதன்
சித்தம் தனிலும் காதல் உண்டு
காரணம் அதன் கணக்கு.....!

உயிருக்குள்தான் காதல் வரணும் என்று
உலகில் ஒன்றும் நியதி இல்லை...
உண்மை புரிந்தால் முள்ளும் மென்மை
உணர்வோம் காதல் என்றும் மேன்மை....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Dec-13, 3:48 am)
பார்வை : 222

மேலே