ஒரு துளி ஆனந்தம் 4
நான்கு சொல் ,இதை நன்கு சொல்.
--------------------------------------------------
பிணியிலும் கொடியது ,
இறுகிய மனது .
பனியிலும் மெல்லியது ,
பகை துறந்த மனது.
ஏற்றம் வேண்டின்
எள்ளாமை போக்கு.
ஆக்கம் வேண்டின்
ஆற்றாமை நீக்கு.
மனமாற்றம் விரும்பிடின்
மகிழ்வை எதிர்நோக்கு.
மகிழ்ச்சியில் திளைத்தல்
ஆனந்தப் போக்கு.
{எதிர் மறையாய் சொன்னால் ,}
வெறுப்புணர்வு கொள்ளுதல் ,
ஆரோக்கியம் அழித்தலாகும்.
சுருங்கக் கூறின்,
ஒவ்வொரு வெறுப்புணர்வு எண்ணமும் ,
நமது ஆரோக்கியத்துக்கு நாமே...
போட்டுக்கொள்ளும் விஷ ஊசியாகும்.