+கவிதை வராத நேரங்கள்+
கவிதை வராத நேரங்கள்
எனக்கு பிடிக்காது!
எனக்கு பிடிக்காத நேரங்களில்
கவிதை வராது!
கவிதை படிக்காத நேரங்கள்
எனக்கு பிடிக்காது!
வேறென்ன படித்தாலும் அது
கவிதை போல் வராது!
கவிதை ரசிக்காத நேரங்கள்
எனக்கு பிடிக்காது!
வேறென்ன ரசித்தாலும் அது
கவிதையாய் இராது!