பாரதியே மீண்டும் வா

முண்டாசு பாகைக்குள்
முரண்பாடாய்
இருப்பவனே !
முறுக்கு மீசையின்
முதல் அத்தியாயமே ..............


எல்லோருக்கும்
முத்தமிழ் தெரியும் !
உனக்கோ
நான்காவது தமிழ் தெரியும்
அது
கோபத்தமிழ்!


ஆத்திரக்கரனுக்கு
புத்தி மட்டு என்பதை
பொய்ப்பித்தவன் நீ !
ஆத்திரம் கொண்டு
அனலாய் மாறினால்
அடங்கி போகும் அட்டுழியம்
என்பதை
மெயப்பித்தவன் நீ !


பாரதியே
மீண்டும் வா .........!

இன்னும் மாறவில்லை
சமுதாயம்
செத்துக்கொண்டு இருக்கிறது
சமதர்மம் !

வா
உன் கவி நாவால் சுடு !
சில நயவஞ்சகர்கள்
நாசமாய் போகட்டும் !

பூரித்து போகதே !
நான் கண்ட
பெண் சுதந்திரம்
கிடைத்து விட்டதென
அமைதி கொள்ளாதே ................
ECR ரோட்டின்
இடது பக்கம் நீ
திருத்த வேண்டியது
அவ்வளவு இருக்கிறது ............!

உரைக்கும் தமிழால்
உலகை திருத்து ...!
உதிராத இல்லை நீ
என்பதை
உலகுக்கு பறைசாற்று !

மீண்டும் வா !
அரசியில் வாதிகளிடம்
இருந்து
எங்களை மீட்டெடுக்க .........!
ஆன்மிக வாதிகளின்
அத்து மீறலை
அடையாளம் காட்ட ........!
"அச்சம் தவிர் ."..
என்கிற உன் ஆத்மார்த்தமான
வரியை
அநியாயத்திற்கு எதிராக
குரல் கொடுக்க மறுக்கும்
வெகுஜன மக்களுக்கு
புரிய வைக்க ........!
அடுத்த பிறவி எடுத்து
அலுக்காமல்
ஓடிவா ...............1


உலகமயமாக்கலில்
ஒட்டிப்போன தமிழனையும் !
உள்ளூர் சந்தையில்
விலை போகா கவிஞனையும்
உருப்படியாக்க.............
உடனே வா !

தாமதிக்காதே .............!
தாமதித்தால் ........
தமிழனின் அடையாளம்
தரணியில் அழியக்கூடும் !
நீ
விரட்டிய ஆங்கில மோகம்
விருட்ஷமாய்
வளரக்கூடும் ............!


ஆனால் ஒன்று !
இந்த முறை
நீ
பேனா எடுக்காதே ..................!
அதர்மங்களை அழிக்க
அவதாரம் எடு....................!

எழுதியவர் : யத்விக (12-Dec-13, 12:28 am)
பார்வை : 135

மேலே