நேசம் செய்

வாழ்வின் ரகசியம் நேசம் என்பதை
வாழ்ந்து பார்த்தவர் நன்கு உணர்ந்ததே
வாழ்க்கை முழுதும் வசந்தம் வேண்டுமா
நீ வன்முறை தவிர்த்து வாழ வேண்டுமா ?

உண்மை நேசத்தை எவரிடமும் கொள்ளு
உதிர்க்கும் வாத்தையில் பணிவை கொள்ளு
இறைவன் தந்த பேச்சு அதனை
பிறரின் இதயம் குளிர பேசிபழகு.........

உன்னை நீயும் நேசிப்பது போலே
உலக உயிர்களை நேசிக்க பழகு
உன்னால் முடிந்த உதவி எதுவும்
நீ உயர்ந்த உள்ளதோடு செய்து பழகு ........

வேற்றுமை எண்ணம் நெஞ்சில் வேண்டாம்
ஒற்றுமை உணர்வுடன் ஒன்றாய் பழகு
பகிர்ந்திட உன்னில் நேசம் இருக்கு
நீ பற்றிடும் இன்பங்கள் நிறைய கிடக்கு .......

மண்ணை பற்றிடும் மரத்தைப்போலே
எவர் மனதையும் நீ பற்றிடபாரு
உன்னைப்போலே ஒருவரும் இல்லை என்பதை
ஒவ்வொருநாளும் உணர்த்திட முயலு ........

முகத்தினை பார்க்கும் மடமை தவிர்த்து
அவர் அகத்தினைகண்டு நேசம் கொள்ளு
இந்த ஜகத்தினை நீயும் வெற்றிகொள்ள
நேசம் ஒன்றே வழியென்று கேளு .......

நஞ்சை கக்கும் நாவை அடக்கி
எவர் நெஞ்சிலும் நீ நிறைந்திடபாரு
நேசம் ஒன்று சுவாசம் என்று
வாசம் செய்து வாழ்க்கை வாழு .......

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Dec-13, 10:19 am)
Tanglish : nesam sei
பார்வை : 113

மேலே