வளை ஓசை
![](https://eluthu.com/images/loading.gif)
வட்டமெனும் கன்னிகையே!
வளைந்தாடும் வடிவினளே!
கலகலவென சிரிப்பவளே!
பொன்னிற புன்னகையே!
கரமெனும் மேனியிலே!
மெல்லியலாய் அமர்ந்தவளே!
எழிலுடனே கவர்பவளே!
ஓசையாலே இனிப்பவளே!
நங்கையின் அணியாளே!
மிளிர்ந்திடும் வனப்பாலே
மங்கை கரம் இணைந்தாயே!