என் உயிர் கவிதை நீ

ஒரே வார்த்தையில்
அழகிய கவிதை..
நீ...
இரண்டு வார்த்தையில்
வாசிக்க விரும்பினால்
நாம்...
மூன்று வார்த்தையில்
மனம் நிறைத்திட , நம்
காதல்..
வார்த்தைகளே இல்லா வசீகர கவிதைவேண்டினால்...
உன் கொஞ்சும் நினைவு ...

உயிர்சான்றாய் உயர்வான
என் உயிர் கவிதை ..
நீ .. இருக்க..

வெறும் வார்த்தை கவிதைகளை
குறிப்பெடுத்து நான்
எதை வெல்வேன்???

எழுதியவர் : ஆசை அஜீத் (16-Dec-13, 1:38 pm)
பார்வை : 237

மேலே