வறுமையின் வெளிப்பாடு

நான்
உணவுயில்லாமல்...

பசியால்
இறந்துவிட்டால்...

ஊர் மக்களுக்கு
ஒரு விண்ணப்பம்/வேண்டுகோள் ...

என்
உடலை
எரித்துவிட வேண்டாம்..

புதைத்துவிடுங்கள்..!

அங்கேயாவது
கொஞ்சம் புல் வளரட்டும்...

அதை
அந்த ஆடுகளும்
மாடுகளும்
மாறி மாறி
மேய்ந்து
தங்கள் பசியை
போக்கி கொள்ளட்டும்..

எழுதியவர் : தமிழ் மகன் (20-Dec-13, 2:32 pm)
பார்வை : 186

மேலே