மனச்சாட்சி கொன்றவர்கள்

மனச்சாட்சி உள்ளவர்கள்
தெரியாமல் தவறிழைத்தாலும்
வெட்கித் தலைகுனிந்து
வேதனைப் படுவார்
அடுத்தவர் எடுத்துரைத்தால்.
மனச்சாட்சி கொன்றவர்க்கு
மற்றவர் குறைகள்தான்
இமயமாய் உயர்ந்து நிற்கும்.
தெரிந்தே தவறிழைத்தாலும்
தம்குறையைச் சுட்டுவோரை
பகைஞராய்ப் பார்த்து
பழிசொல்லிப் புறங்கூறி
தாம்யார் என்பதை
வெட்கமின்றி வெளிப்படுத்திக்
கடுஞ்சொல்லில் சாடுவார்.