ஐயகோ

எப்போதுமே பகல் போன்ற
நல்ல வெளிச்சம் இரவிலும் ..
மின்கட்டணத் தேவையென்று
ஏதுமில்லை !
மிக உயரத்தில் வாழப் போகிறோம் நாம் ..
என்று பார்த்து பார்த்து
இறுதியில் கூடு கட்ட
ஆரம்பித்தன,
ஓர் இணைக் குருவிகள்
தெருவிளக்கின் பின்புறத்தில் !

எழுதியவர் : கார்த்திகா AK (24-Dec-13, 6:14 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : iyago
பார்வை : 74

மேலே