கேள்விக்கு என்ன பதில் - நாகூர் கவி

உடலுக்கு மருந்துண்டு கண்டீர்
உள்ளத்திற்கு மருந்தொன்றை கண்டீரா... ?
பசிக்கு மருந்துண்டு கண்டீர்
வறுமைக்கு மருந்தொன்றை கண்டீரா...?
இதயத்திற்கு மருந்துண்டு கண்டீர்
காதலுக்கு மருந்தொன்றை கண்டீரா...?

அனாதைகள் இல்லங்கள் கண்டீர்
பெற்றோர்கள் உள்ளங்களை கண்டீரா... ?
முதியோர்கள் இல்லங்கள் கண்டீர்
பிள்ளைகளின் உள்ளங்களை கண்டீரா... ?
கன்னிகள் இல்லங்கள் கண்டீர்
கல்யாண உள்ளங்கள் கண்டீரா...?

கோயில் ஸ்தலங்களை கண்டீர்
கடவுளை அங்கு கண்டீரா... ?
பள்ளிக்கூடங்களை கண்டீர்
ஏழை மாணவனை கண்டீரா... ?
பலமருத்துவமனைகளை கண்டீர்
நீடித்த ஆயுளைக் கண்டீரா...?

நாட்டில் விடுதலையை கண்டீர்
சுதந்திரத்தை கண்டீரா...?
தலைமைகள் பலக் கண்டீர்
நல்லாட்சியொன்றைக் கண்டீரா... ?
கவிதைகள் பலபலக் கண்டீர்
கருப்பொருள் ஏதேனும் கண்டீரா...?

எழுதியவர் : நாகூர் கவி (24-Dec-13, 8:18 pm)
பார்வை : 167

மேலே