வாழ்க்கை

நிமிர்ந்த மதில் சுவர்.
அருகே,
சிதறிய செங்கற்கள் - மற்றும்
சாந்து கரண்டியும்,
சமாந்தர பலகையும்.
வண்ணங்களை தீட்டவே ஓடுகிறோம்.
மதிலை கட்டவே நடக்கிறோம்.
ஆனாலும்,
தீட்டாத வண்ணங்களும்
கட்டாத மதிலும்
விரவி கிடக்கின்றன....
ஒரு புல்லாங்குழல் ஓசை போல,
வாழ்வு பயமுறுத்துகின்றது .
எங்கே தொலைவோம்,
எங்கே வாழ்வோம்,
என்பது தெரியாத இவ்வாழ்வில்
செங்கற்களும் மதிலுகளும் நிறைய....